Load Image
dinamalar telegram
Advertisement

நடைபாதையில் இருந்த ராட்சத குழாய்கள் அகற்றம்

Tamil News
ADVERTISEMENT


திருமங்கலம், நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, நடைபாதையில் பல மாதங்களாக போட்டு வைக்கப்பட்டிருந்த ராட்சத குழாய்கள் அகற்றப்பட்டன.திருமங்கலம் பகுதியில், பாடியில் இருந்து திருமங்கலத்தை நோக்கி செல்லும் 100 அடி சாலை உள்ளது. இந்த சாலையில், 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். இதனால், பாதசாரிகள் பயன்பாட்டிற்கான சாலையோரத்தில் தடுப்புகளுடன் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நடைபாதையில், சில மாதங்களாக குடிநீர் வாரியத்தின் ராட்சத இரும்பு குழாய்கள் போடப்பட்டிருந்தன. நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் சாலையில் நடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சென்னை குடிநீர் வாரியத்தினர் ராட்சத குழாய்களை அப்புறப்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement