Load Image
dinamalar telegram
Advertisement

மாணவி கடத்தல் வாலிபர் மீது வழக்கு



செஞ்சி-பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், செஞ்சியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி காலை பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மாணவியின் தந்தை, தனது மகளை பொன்பத்தியைச் சேர்ந்த ஏசுராஜ், 22; என்பவர் கடத்திச் சென்றதாக அளித்த புகாரின் பேரில், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து ஏசுராஜை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement