காகுப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்-காகுப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் காகுப்பம் கிராமத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. இந்நிலையத்தில் நேற்று, கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.அப்போது, கழிவுநீர் சுழற்சி முறையில் சுத்திகரிக்கப்படுகிறதா, சுத்திகரிக்கப்பட்ட நீரின் தன்மை குறித்து ஆய்வு செய்தார்.கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். இதனால் பொதுமக்கள், கால்நடைகள், விளைநிலங்களுக்கு தீங்கு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி இயந்திரங்களை பராமரித்து கண்காணிப்பதுடன், பொதுமக்கள் புகார் அளிக்காத படி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கமிஷனர் சுரேந்திரஷா உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!