கருணாநிதி நினைவு நாள் அமைதி ஊர்வலம்
செஞ்சி,-முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் அறிக்கை:முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று 7ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகள், நகராட்சி, பேரூராட்சி பகுதியில் அனைத்து நிர்வாகிகளும், அமைதி ஊர்வலம் சென்று கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியதை செலுத்த வேண்டும்.தொடர்ந்து, ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!