புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் தேர் பவனி
விழுப்புரம்-கல்பட்டு புனித வனத்து சின்னப்பர் ஆலய 121வது ஆண்டு விழா ஆடம்பர தேர்பவனி நாளை நடக்கிறது.விழா, கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினசரி காலை மற்றும் மாலையில் திருப்பலி, சிறிய தேர்பவனி நடந்து வருகிறது. நாளை 8ம் தேதி காலை 8:00 மணிக்கு, புதுச்சேரி கடலுார் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலியும், இரவு 9:30 மணிக்கு ஆடம்பர தேர் பவனியும் நடக்கிறது. 9ம் தேதி நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது.ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ஆரோக்கிய சகாய செல்வம் செய்து வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!