வேலி போட்ட தகராறு; 4 பேர் மீது வழக்கு
ரிஷிவந்தியம்-லாலாபேட்டையில் அத்துமீறி வேலி போட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹீம் மகன் அன்சாரி, 39; இவரது அக்கா மகள் பாத்திமா ஜம்ரோஸ். இவரது விளைநிலம் ரிஷிவந்தியம் அடுத்த லாலாபேட்டையில் உள்ளது.அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவர், பாத்திமா ஜம்ரோஸ் நிலத்தில் அத்துமீறி வேலி போட்டார்.இதனையறிந்த அன்சாரி கடந்த 3ம் தேதி மதியம் லாலாபேட்டைக்கு வந்து வேலிபோட்டது தொடர்பாக நாகம்மாளிடம் தட்டிக்கேட்டார்.அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், நாகம்மாள் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த 4 பேர் அன்சாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், லாலாபேட்டையைச் சேர்ந்த நாம்மாள், ஏழுமலை மற்றும் பெயர் தெரியாக இருவர் மீது பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!