Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய நிறுவனத்தில் போட்டி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

திருப்போரூர்:மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, திருப்போரூரில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
திருப்போரூர் அடுத்த முட்டுக்காட்டில், மத்திய அரசின் சமூக நீதித்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் இயங்கி வருகிறது.இந்நிறுவன சமூக பொறுப்பு பிரிவு, 'லேடீஸ் சர்க்கிள் இந்தியா' அமைப்பு மற்றும் 'ரவுண்டு டேபிள் இந்தியா' அமைப்பு இணைந்து, விளையாட்டு தினத்தை நடத்தின.
சிறப்பு குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில், பல உள் விளையாட்டு, வெளிப்புற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.ஓட்டப்பந்தயம், பந்து துாக்கி எறிவது உள்ளிட்ட எளிமையான போட்டிகளில் 136 சிறப்பு குழந்தைகள் விளையாடினர்.
இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பதக்கம் மற்றும் பங்கேற்ற குழந்தைகளுக்கு கலை பொருட்கள் வழங்கப்பட்டன.மேலும், வீடுகள்தோறும் தேசியக்கோடி ஏற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி, மேம்பாட்டு நிறுவனத்தினர் விளக்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement