வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம்
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். சுகாதார பேரவை குழுவின் மூலம் கிராம மக்களின் சுகாதார தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி தேவையை பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன், வட்டார கல்வி அலுவலர் ஜெயசங்கர், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் பிருத்திவி ராஜன், அனைத்து ஊராட்சி தலைவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!