Load Image
dinamalar telegram
Advertisement

மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டி நிறைவு விழா



விழுப்புரம்-மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டி நிறைவு விழா நடந்தது.விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6வது மாநில அளவிலான அழைப்பு மல்லர்கம்பம் போட்டி கடந்த 31ம் தேதி துவங்கியது. விழுப்புரம் மாவட்டம் மற்றும் தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம் இணைந்து நடத்திய இப்போட்டியில் 22 மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், 25 நடுவர்கள் பங்கேற்றனர்.பொதுப்பிரிவு மற்றும் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் என ஆண், பெண் இருபாலருக்கும் மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம் ஆகிய இரண்டு போட்டிகள் நடந்தது.நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் 300 பங்கேற்பாளர்கள் சான்றிதழ், 250 வெற்றியாளர்கள் சான்றிதழ், 132 பதக்கம், கேடயம், கோப்பை ஆகியவை வழங்கப்பட்டது.ஒட்டுமொத்த சிறந்த அணிக்கான கோப்பையை விழுப்புரம் அணி பெற்று சாதனை படைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement