மணிமுக்தா அணையில் கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில், மணிமுக்தா அணையை கலெக்டர் ஆய்வு செய்தார்.அப்போது, அணையின் கொள்ளளவு, நீர் வெளியேற்றம், விவசாய பாசன பரப்பளவு உள்ளிட்ட தகவல்களை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அணையின் மதகு சீரமைப்பு பணி நடப்பதை ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அணையின் அனைத்துப் பாதுகாப்பு பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.அணையின் நீர் பிடிப்பு அளவினை அதிகரித்திட வண்டல் மண் எடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் மழை நீரை சேகரித்து நீர் ஆதார அமைப்பினை உருவாக்கிட வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.ஆய்வின்போது, மணிமுக்தா அணை உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் விஜயகுமரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!