Load Image
dinamalar telegram
Advertisement

குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது



விழுப்புரம்-விழுப்புரத்தில் கல்லுாரி மாணவர் கொலை வழக்கில் கைதான 2 வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.திருவெண்ணெய்நல்லுார் டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண், 19; கல்லுாரி மாணவர். இவர் கடந்த மாதம் 20ம் தேதி கொலை செய்யப்பட்டு, உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் கொலை வழக்கு பதிந்து, டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் சரத்ராஜ் (எ) சரத், 21; அருளவாடி, மெயின்ரோட்டைச் சேர்ந்த ராமு மகன் ராஜேஷ், 19; மற்றும் 4 சிறுவர்களை கைது செய்தனர்.இதில், சரத்ராஜ் மற்றும் ராஜேைஷ குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. ஸ்ரீநாதா, கலெக்டர் மோகனுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில், சரத்ராஜ் மற்றும் ராஜேஷ் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement