பெண்ணைத் தாக்கிய 7 பேர் மீது வழக்கு
ரிஷிவந்தியம்-காட்டுஎடையாரில் பெண்ணைத் தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அமுதா, 45; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குப்புராமன் மகன் ஜெயராமன் என்பவருக்கும் பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.இந்நிலையில், ஜெயராமன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த சிலர், கடந்த ஜூலை 28ம் தேதி இரவு அமுதாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.புகாரின் பேரில் ஜெயராமன், ஏழுமலை, கணேசன், அஞ்சலை உட்பட 7 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!