Load Image
dinamalar telegram
Advertisement

குட்டீசை குஷிப்படுத்தும்ஷாப்பிங் எக்ஸ்போ!



'கிரியாஸ்' சார்பில், குழந்தைகளை குதுாகலப்படுத்தவும், குடும்பத்தோடு பொருட்களை வாங்கவும், ஷாப்பிங் எக்ஸ்போ, திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில், நேற்று துவங்கியது; வரும் 9ம் தேதி வரை நடக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, 'லக்கி டிரா' நடத்தி, பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதால், குட்டீஸ் படு குதுாகலமாக, கண்காட்சியில் பங்கேற்கின்றனர். காண்போரை கவரும் வகையில், மலர் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை குஷிப்படுத்த, பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. 'ஸ்னோ வேர்ல்டு' எனும் செயற்கை பனிக்கட்டி உலகத்திற்குள், குழந்தைகளை அனுப்பி மெய்மறக்க செய்யலாம். பெரியோரும் குழந்தைகளாக மாறி, பனிகட்டிகளுடன் விளையாடி மகிழலாம். விளையாடி களைத்து போன பிறகு, உணவுத்திருவிழா பக்கம் தலை காட்டலாம். நுாற்றுக்கும் மேற்பட்ட அசைவ உணவு காத்திருக்கிறது. 150க்கும் மேற்பட்ட அரங்குகளில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement