Load Image
dinamalar telegram
Advertisement

மின்விசை பம்ப் நிலை மோசம் போந்தூர் மக்களுக்கு சிரமம்

சித்தாமூர்:சரியான பராமரிப்பு இல்லாமலும், செயல்படாமலும் சிதிலமடைந்து காணப்படும் மின்விசை பம்ப் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, போந்துார் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சித்தாமூர் அருகே, போந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தத்தில், மின்விசை பம்ப் குடிநீர் தொட்டி, 2012ல், ஊரக வளர்ச்சி துறை சார்பாக கட்டப்பட்டது.இப்பகுதி மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக செயல்பட்ட நிலையில், 2016 - 17ல், 10 ஆயிரம் ரூபாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத காரணத்தால், மின்விசை பம்ப் மோட்டார் பழுதடைந்து, குடிநீர் தொட்டி சிதிலமடைந்து, வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.இதனால் கிராமத்தினர், குடிநீருக்காக நீண்ட துாரம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கிராம மக்கள் பயனடைய, சிதிலமடைந்த மின்விசை பம்ப் குடிநீர் தொட்டியை சீரமைத்து தர, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement