Load Image
dinamalar telegram
Advertisement

பாழாய் போன பாலுார் சாலைசீரமைக்க வேண்டுகோள்

Tamil News
ADVERTISEMENT
பவுஞ்சூர்:பல ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ள பாலுார் சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் அடுத்த, பச்சம்பாக்கம் ஊராட்சி பாலுார் கிராமத்திற்கு செல்லும் சாலை, 20 ஆண்டுளுக்கு முன் அமைக்கப்பட்டது.அதன் பின் பராமரிப்பு இல்லாததால், சாலை சிதிலமடைந்து பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல லாயக்கற்ற நிலையில் உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் விவசாய வேலைக்கு செல்வோர், கடும் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த பருவமழை வெள்ளத்த்தில், சாலை அரிக்கப்பட்டு, மேலும் மோசமாகி உள்ளது.மின் விளக்குகள் இல்லாததால், இரவில் செல்லும் வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்வோர், ஜல்லிக்கற்கள் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.சிதிலமடைந்துள்ள சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement