பைக் திருட்டு: 2 பேர் கைது
விழுப்புரம்-செஞ்சி பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களாக பைக் திருடு போனது. டி.எஸ்.பி., பிரியதர்ஷினி மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் பைக் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.அதில், திருவண்ணாமலை மாவட்டம், களவாசல், முனிவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன், 24; மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், 22; ஆகியோர் பைக்குகளை திருடி வந்தது தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து, 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!