Load Image
dinamalar telegram
Advertisement

தெய்வானை அம்மாள் கல்லுாரியில்புதுமுக ஒருங்கிணைத்தல் விழா



விழுப்புரம்-தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், மாணவர்களின் புதுமுக ஒருங்கிணைத்தல் விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் அகிலா தலைமை தாங்கி, கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆன்லைன் படிப்பு, இடைநிலை படிப்பு உள்ளிட்ட கல்வி செயல்பாடுகள் குறித்து பேசினார்.இ.எஸ்.எஸ்.கே., கல்வி அறக்கட்டளை துணைப் பதிவாளர் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மணிகண்டன் அறிமுக உரையாற்றினார்.துணை முதல்வர் செல்வி, ஆராய்ச்சி புலம் பேராசிரியை கலைமதி, தேர்வு கட்டுப்பாட்டாளர் ஸ்ரீதேவி, வேலை வாய்ப்பு அலுவலர் முத்துராஜா உள்ளிட்டோர் கல்லுாரியின் வேலை வாய்ப்பு செயல்பாடுகள், உட்கட்டமைப்பு, கல்வி செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.முன்னதாக மாணவியர் புல முதன்மையர் ராஜேஸ்வரி வரவேற்றார். இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement