தே.மு.தி.க., ஆலோசனைக் கூட்டம்
ரிஷிவந்தியம்-பகண்டைகூட்ரோட்டில் தே.மு.தி.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். மத்திய ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் கருணாகரன், மாவட்ட தேர்தல் ஆணையாளர் ராஜசந்திரசேகர் ஆகியோர் உட்கட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.மாவட்ட அவைத்தலைவர் கோவி முருகன், பொருளாளர் கருணாகரன், மாணவரணி செயலாளர் பன்னீர்செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல், முன்னாள் கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஏழுமலை, நிர்வாகிகள் வடமலை, செந்தில், மோகன் உட்படபலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் 25ம் தேதி விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவது. ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லுாரிக்கு போர்க்கால அடிப்படையில் இடத்தை தேர்வு செய்து, கட்டட பணி தொடங்கா விட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!