செய்திகள் சில வரிகளில்...
ஆர்.கே.பேட்டை:ஒன்றிய குழு கூட்டத்தில், குடிநீர் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், பல்வேறு ஊராட்சிகளில், குடிநீர் குழாய் அமைப்பதற்காக, 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பழுதடைந்துள்ள பள்ளி கட்டடங்களை இடித்து அகற்றவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!