ADVERTISEMENT
திருத்தணி:ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் குழாய் சேதமடைந்து உள்ளதால், தண்ணீர் வீணாகி வெளியேறுகிறது.
திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்கள், குடிநீர் தேவைக்காக, கிராமம் அருகே, ஊராட்சி நிர்வாகம், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி, அதன் மூலம் தெருக் குழாய்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஒரு மாதமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் குழாய் சேதம் அடைந்து உள்ளது. இதனால், ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் போது சேதமடைந்த குழாயில் இருந்து, தண்ணீர் வீணாக செல்கிறது.
இதனால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வீணாகும் குடிநீர் குழாயை சீரமைக்காமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.எனவே, குடிநீர் குழாயை சீரமைத்து தண்ணீர் வீணாகாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!