Load Image
dinamalar telegram
Advertisement

மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்தலைவர்கள் உருவாகிறார்கள்!

Tamil News
ADVERTISEMENT
தலைமை பண்பு பயிற்சி பெற, பள்ளியை தவிர சிறந்த சூழல் வேறில்லை. இதற்கான விதை, ஆரம்ப கல்வியிலே விதைக்க, மாணவர் மன்ற தேர்தலை, மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறது, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.

தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்குவது போலவே, மாணவர் மன்ற தேர்தலில் நிற்பவர்களுக்கும், பிரத்யேகமாக சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, பிரசாரங்கள் நடத்தி, நேற்று தேர்தல் நடந்தது. வாக்களித்ததற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டது. வழக்கமான தேர்தலில், ஓட்டுச்சாவடி மைய பாதுகாப்புக்கு போலீசார் நிற்பது போல, ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்தினர். ஓட்டு போட்டவுடன், கும்பலாக நின்று பேசாமல், மாணவர்கள் வகுப்பறையை சென்றடைந்தனர்.
தலைமையாசிரியர் மைதிலி கூறுகையில், '' மாணவர் மன்ற தேர்தலில், தலைவர், துணைத்தலைவர் பதவிகளோடு, சுகாதாரம், ஒழுக்கம் ஆகிய இரு துறைகள் உருவாக்கி, அதன் தலைவர், துணை தலைவர் என, மொத்தம் ஆறு பதவிகளுக்கு, 18 பேர் போட்டியிட்டனர். 490 மாணவர்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள், வரும் 8ம் தேதி அறிவிக்கப்பட்டு, சுதந்திர தினத்தன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும்,'' என்றார்.இடைநிலை ஆசிரியர் சக்திவேல் கூறுகையில், ''மாணவர்கள் மத்தியில் தலைமைப்பண்பை உருவாக்க எடுக்கப்பட்ட சிறு முயற்சிதான் இத்தேர்தல். வழக்கமான தேர்தலை போலவே நடத்துவதால், உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தலைவர்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள். அதற்கான பயிற்சி பட்டறையாக, பள்ளிகள் செயல்பட வேண்டும்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement