Load Image
dinamalar telegram
Advertisement

சிவாச்சாரியார்கள் 11 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது



புதுச்சேரி-புதுச்சேரி மாநில ஆதிசைவ சுந்தரமூர்த்தி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், சிவாச்சாரியார்கள் 11 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.புதுச்சேரி மாநில ஆதிசைவ சுந்தரமூர்த்தி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், ஆடிமாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி, லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள ஸ்ரீ வலம்புரி ஞான விநாயகர் கோவிலில் நேற்று சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.இதில், புதுச்சேரியில் உள்ள 70 வயதிற்கு மேற்பட்ட சிவாச்சாரியார்கள் 11 பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட் டனர்.இந்த விருதை திருநள்ளாறு கோடிச்வர சிவாச்சாரியார் தலைமை தாங்கி வழங்கினார். டிரஸ்ட் தலைவர் கணேசன் வரவேற்றார். நிர்வாகிகள் அர்த்தநாரி, ஞானசேகர், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சேதுசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement