Load Image
dinamalar telegram
Advertisement

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு



புதுச்சேரி-மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் பிரதமரின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.தாம்பரம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஹிமான்சு குமார், புதுச்சேரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் விக்னேஸ்வரன், உதவி ஆணையர் சரவணக்குமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் நிறுவன பிரதிநிதிகள் எழுப்பிய வருங்கால வைப்பு நிதி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், 18 வயது முதல் 40 வயது வரையில் உள்ள மற்றும் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.இதன் மூலம் 60 வயதிற்கு பிறகு மாத ஓய்வூதியமாக ரூ.3,௦௦௦, குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,500 கிடைக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் அமலாக்க அதிகாரிகள் வெங்கடேஸ்வரன், ஆர்த்தி, ஸ்ரீலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement