ADVERTISEMENT
புதுச்சேரி-புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.கடற்கரைச் சாலை, காந்தி திடலில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குனர் தமிழ்ச் செல்வன் வரவேற்றார்.இதில், பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்பக் கலைஞர் முனுசாமி, நேரடியாக சுடுமண் பொம்மை கள் செய்து, அதில் தேசியக் கொடி ஏற்றி முதல்வர் மற்றும் கடற்கரைக்கு வந்திருந்த சிறுவர்களுக்கு வழங்கினார்.தொடர்ந்து, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வீடு தோறும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.தொடர்ந்து கல்மண்டபம் முனீஸ்வரன் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!