ஒரு லட்சம் வீடுகளில் தேசியக்கொடியேற்ற முடிவு
அன்னூர்:கோவை வடக்கு மாவட்டத்தில், ஒரு லட்சம் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற உள்ளதாக, பா.ஜ., தெரிவித்துள்ளது. சுதந்திர தின 75வது ஆண்டை முன்னிட்டு, வரும், 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள், அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்களிடம் தேசியக் கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நான்கு சக்கர வாகன யாத்திரை அன்னூரில், நேற்று நடந்தது. இதில் பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா பேசுகையில், "கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளில் ஒரு லட்சம் வீடுகளில், தேசிய கொடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.கணேசபுரம் வழியாக, கோவில்பாளையத்தில் வாகன யாத்திரை முடிவடைந்தது. 75 க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!