வாரத்தில் ஒரு நாள் குடிநீர் சப்ளை வேடந்தாங்கல் மக்கள் வேதனை
அச்சிறுப்பாக்கம்:வேடந்தாங்கல் ஊராட்சியில், வாரத்தில் ஒருநாள் மட்டுமே வினியோகம் செய்வதால், குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வேடந்தாங்கல் கிராமத்தில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதன் வாயிலாக குழாயில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.பல, மாதங்களாக வேடந்தாங்கல் பகுதியில், வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
மற்ற தேவைகளுக்கு, உப்பு கலந்த தண்ணீரை, அதே குழாயில் வினியோகம் செய்கின்றனர். இதனால், குடிப்பதற்கு உகந்ததாக, ஒரு நாள் வினியோகிக்கும் நல்ல தண்ணீரும் உவர்ப்பாக இருப்பதால், கிராம மக்கள் வேதனை அடைகின்றனர்.
வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வி.ஆறுமுகம், 38, என்பவர் கூறியதாவது:எங்கள் பகுதியில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வாயிலாக, வாரத்தில் ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இதனால், பணம் செலவு செய்து, தனியாரிடம் கேன் குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
வேடந்தாங்கலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிப்பதற்கு உகந்த நல்ல தண்ணீர் வினியோகம் செய்ய, தனியாக 'பைப் லைன்' அமைக்க வேண்டும்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கவும், மற்ற தேவைகளுக்கு உப்பு தண்ணீரை காலை, மாலை இரு வேலைகளிலும் வினியோகிக்கவும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!