Load Image
dinamalar telegram
Advertisement

ரூ.3 லட்சம் நகை பறிப்பு:இரு வாலிபர்களுக்கு வலை

கோவை:சிங்காநல்லுாரில் பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் நகை பறித்து தப்பிய வாலிபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை சிங்காநல்லுார் உப்பிலிபாளையம் ரோடு ஆர்.வி.எல்., நகரை சேர்ந்த சுகுமார் மனைவி காமாட்சி, 34. இவர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பஸ்சில் இருந்து, இறங்கி வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். பின் தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், காமாட்சி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர்.இதில் தங்கச் சங்கிலி மற்றும் டாலர் சங்கிலி என, மொத்தம் ஏழரை பவுன் நகை பறிபோனது. காமாட்சி அலறி கூச்சல் போட்டும், கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. புகாரின்படி, சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement