தாய்ப்பால் வார விழா; பிம்ஸ் சார்பில் விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரி-உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, பிம்ஸ் மருத்துவ கல்லுாரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.புதுச்சேரி கடற்கரையில் கார்கில் நினைவு சின்னம் அருகே, பிம்ஸ் மருத்துவ கல்லூரி செவிலியர் மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.ஊர்வலத்தை, உலக சுகாதார அமைப்பு கண்காணிப்பு மருத்துவ அதிகாரி சாய்ராபானு துவக்கி வைத்தார். தலைமை செயலகம் வரை சென்று காந்தி சிலையை வந்தடைந்த ஊர்வலத்தில் கல்லுாரி முதல்வர் அனில் பூர்த்தி, துணை முதல்வர் ஸ்டாலின், டாக்டர் வேலவன் உட்பட பலர் பங்கேற்றனர்.குழந்தை மருத்துவ நிபுணர் பீட்டர் பிரசாந்த் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!