பட்டப்படிப்பு காலத்தில் டிப்ளமோ படிக்க வசதி
மேட்டுப்பாளையம்:"பட்டப் படிப்பு படிக்கும் பொழுது, கூடுதலாக இரண்டு டிப்ளமோ கோர்ஸ் படிக்கும் வசதி, பாரதியார் பல்கலையில் ஏற்படுத்தப்பட உள்ளது," என, துணைவேந்தர் காளிராஜ் பேசினார். காரமடை டாக்டர் ஆர்.வி.,கலை அறிவியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ், மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, பேசுகையில், ''பட்டப்படிப்பு காலத்தில், கூடுதலாக இரண்டு டிப்ளமோ வகுப்புகள், மற்றும் சான்றிதழ் கோர்ஸ் படிக்க, பல்கலையில் விரைவில் திட்டம் துவங்கப்பட உள்ளது. 'தொழில் கூடம் தேடி கல்வி' என்ற திட்டமும் விரைவில் துவக்கப்பட உள்ளது.''பல்கலையின் சார்பில் பாடம் நடத்தப்படும். கம்பெனிகளில் செயல்முறை கல்வி அளிக்கப்படும். மாணவர்கள் தொடர்ந்து படித்து, திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.கல்லூரி முதல்வர் ரூபா, செயலர் சுந்தர், நிர்வாக அலுவலர் சீனிவாசன், எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி செயலர் ஜெயக்கண்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!