Load Image
dinamalar telegram
Advertisement

கமலசாய்பாபா கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு



புதுச்சேரி-காலாப்பட்டில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.காலாப்பட்டு, பிள்ளைச்சாவடியில் ஸ்ரீ கமல சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 4ம் தேதி வியாழக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.இரவு 7.00 மணிக்கு கோவிலை பூட்டி சென்ற அர்ச்சகர் சங்கரநாராயணன் மறுநாள் காலை 6:00 மணிக்கு கோவிலை திறந்த போது கோவில் மற்றும் அன்னதான கூடத்தில் இருந்த உண்டியல்கள் உடைந்து கிடந்தது. அதில் இருந்த காணிக்கை திருடு போயிருந்தது.இதுகுறித்து, அறங்காவலர் புண்ணியக்கோடி கொடுத்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், அங்கிருந்த சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement