Load Image
dinamalar telegram
Advertisement

குப்பை கொட்டும் இடமாகிய வாசீஸ்வரர் கோவில் குளம்

Tamil News
ADVERTISEMENT
திருப்பாச்சூர்:திருப்பாச்சூர் பகுதியில், பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளம், குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் உள்ளது, ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான குளம், கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.தற்போது, மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை பெய்தும்,

இந்த குளத்தில் ஒரு சொட்டு நீர் இல்லை.இதற்கு, இந்த கோவில் குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போயுள்ளது. அதனால், குளத்திற்கு நீர் வருவது, தடைப்பட்டுள்ளது என, பக்தர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.மேலும், இந்த கோவில் குளம், போதிய பராமரிப்பு இல்லாததால், படிகள் மற்றும் குளத்தின் நடுவே உள்ள மண்டபமும் சிதலமடைந்து காணப்படுகிறது.

இவ்வாறு குளம் வறண்டு இருப்பதால், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும், பகுதி மக்கள் தங்கள் குப்பையை கொட்டும் இடமாகவும், முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டி இருக்கிறது. எனவே, வாசீஸ்வரர் கோவில் குளத்தை ஹிந்து சமய அறநிலைய துறையினர், சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement