Load Image
dinamalar telegram
Advertisement

விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டு விழா துவங்கியது



புதுச்சேரி-புனித விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் 171-ம் ஆண்டு விழா நேற்று காலை சேலம் மறை மாவட்ட ஆயர் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை சிறப்பு திருப்பலி, தேர்பவனி நடந்தது. ஜென்மராக்கினி அன்னை பேராலய பங்குதந்தை அல்போன்ஸ் சந்தானம் கலந்து கொண்டார். தொடர்ந்து 'இறையாசீரை நிரம்ப பெற்றவர்' என்ற தலைப்பில் மறையுரை நடந்தது.தொடர்ந்து 14ம் தேதி வரை தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கின்றது. வரும் 15ம் காலை 8 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. 16ம் தேதி காலை 6.15 மணிக்கு கொடியிறக்கத்துடன் ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement