பொது இடங்களில் திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றம்
புதுச்சேரி-திருபுவனை தொகுதியில் பொது இடங்களில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டது.
திருபுவனை தொகுதி சன்னியாசிக்குப்பம், திருபுவனை, திருவாண்டார் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, எம்.எல்.ஏ., அங்காளனிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து அவர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜனிடம், பொது இடங்களில் திரியும் பன்றிகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.அதன்படி, ஆணையர் எழில்ராஜன் முன்னிலை யில் ஊழியர்கள், திருபுவனை போலீசார் உதவியுடன், பன்றி பிடிப்பவர்களை கொண்டு, பொது இடங்களில் சுற்றித் திரிந்த பன்றிகளை பிடித்தனர்.மேலும், பன்றிகளை வளர்ப்பவர்களை அழைத்து, இனிவரும் காலங்களில் பன்றிகளை வெளியில் திரியவிடாமல் பட்டிகளில் அடைத்து பாதுகாக்க வேண்டும். மீறும் பட்சத்தில் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக் கப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!