Load Image
dinamalar telegram
Advertisement

70 கொசு ஒழிப்பு பணியாளர்கள்3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், கொசு புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள, 70 பணியாளர்களுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், நத்தம், வேதாசலம் நகர், அழகேசன் நகர், அனுமந்தபுத்தேரி அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்து, 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் மழை நீர் கால்வாய், வீடுகளில் கொசுக்கள் வளர்வதை தடுக்கவும், நோய் தொற்று பரவாமல் இருக்கவும், கொசு ஒழிப்பு பணி மேற்கோள்ள, 70 பணியாளர்கள் நகராட்சியில் தற்கலிகமாக நியமிக்கப்பட்டனர்.
அவர்களின் பணி காலம் முடிகிறது.இதனால், பொது சுகாதார பிரிவில் தொய்வின்றி பணிகள் நடக்கவும், நிர்வாக நலன் கருதியும், மேலும் மூன்று மாதங்களுக்கு இவர்களின் பணியை நீட்டிக்க, தனியார் நிறுவனத்திற்கு 27 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள, நகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கொசு ஒழிப்பு பணியில் தற்காலிக பணியாளர் ஈடுபட, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement