ஏ.டி.எம்.,வந்தவரிடம்பணம் பறிப்பு
சென்னை:அண்ணா நகர், சாந்தி காலனியில் எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு, பாடியைச் சேர்ந்த தனுஷ், 21, என்பவர் வங்கி கணக்கில் செலுத்துவதற்காக, 37 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்துள்ளார்.
அவருக்கு பணம் செலுத்த தெரியாததால், அங்கு வந்திருந்த அடையாளம் தெரியாத வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார். அங்கிருந்த வாலிபர், தன் வங்கி கணக்கில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக பணத்தை அனுப்புவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய தனுஷ், தன்னிடமிருந்த 37 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.அந்த நபர், தன் மொபைல் எண்ணை கொடுத்து, வங்கி கணக்கில் பணம் செலுத்தியதாக கூறி சென்றார். வெகு நேரமாகியும், தனுஷ் வங்கி கணக்கிற்கு பணம் வராததால் சந்தேகமடைந்துள்ளார்.
அந்த நபரின் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின்படி, அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!