Load Image
dinamalar telegram
Advertisement

சுதந்திர தின ஓவியப்போட்டி



புதுச்சேரி-சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது.நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் பா.ஜ., சார்பி்ல் ஓவியப்போட்டி நடைபெற்று வருகிறது. காமராஜ் நகர் தொகுதி வெங்கட்டா நகர், பூங்காவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.போட்டியை பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன், ஜான்குமார் எம்.எல்.ஏ., ஆகி யோர் துவக்கி வைத்தனர். பா.ஜ., துணைத் தலைவர் ரவிச்சந்திரன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், இளைஞரணி மாநில துணைத்தலைவர் உமாசங்கர், வர்த்தக பிரிவு சீனிவாச பெருமாள், காமராஜ் நகர் தொகுதி மகளிரணி தலைவர் தனலட்சுமி உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement