பட்ஜெட்டிற்கு அனுமதி பெற்று தர வேண்டும்: கவர்னருக்கு அ.தி.மு.க., வலியுறுத்தல்
புதுச்சேரி-புதுச்சேரி பட்ஜெட்டிற்கு கவர்னர் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:கவர்னர் தலைமையில் நடந்த திட்டக்குழு கூட்டத்தில் இவ்வாண்டு பட்ஜெட், மத்திய அரசின் நிதியுதவி, மாநில அரசின் வருவாய் மற்றும் கடன் பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கி ரூ.11 ஆயிரம் கோடி என இறுதி செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் நிதியுதவி தோராயமாக ரூ.2,900 கோடி என முடிவு செய்யப்பட்டிருந்தது.இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.1729 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்பொழுது கூடுதலாக மாநில அரசு, ரூ.1,200 கோடி மத்திய அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து இவ்வாண்டு பட்ஜெட்டிற்கான தொகையை இறுதி செய்துள்ளது.மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி உள்ள நிலையில் மத்திய அரசின் கூடுதல் நிதியான ரூ.1,200 கோடியை, பட்ஜெட் இறுதி வரைவுக்கு முன்பே அனுமதி வாங்குவது சிறப்பாகும். ஆனால் இந்த தொகையை மத்திய அரசு இதுவரை ஏற்காததால் இவ்வாண்டு ரூ.11 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டிற்கு இன்று வரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.கடந்த காங்.,- தி.மு.க., ஆட்சியில் சட்டசபை சமர்ப்பித்த பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் அனுமதியின்றி தேக்க நிலை ஏற்பட்டது. அதுபோன்று தற்போது ஏற்படாமல் இருக்க கவர்னர் நேரிடையாக டில்லிக்கு சென்று மாநில பட்ஜெட்டிற்கு உரிய அனுமதியை பெற்றுத்தர வேண்டும்.ரேஷன் அரிசி விவகாரத் தில் உண்மை நிலையை துறையின் அமைச்சர் அல்லது உயரதிகாரிகள் மக்கள் முன் கூற வேண்டும். வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியின ருக்கு தேசியக்கொடி வழங் கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அவைத் தலைவர் அன்பானந்தம், நகர செயலாளர் அன்பழகன் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!