மானியத்தில் நெல் விதைகள் விவசாயிகளுக்கு அழைப்பு
மதுராந்தகம்,:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு, மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட உள்ளது
மதுராந்தகம் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.விவசாயிகளிடத்தில், பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்ய ஊக்குவிக்கும் விதமாக, மானிய விலையில், அரசு சார்பில் நெல் விதைகள் வழங்கப்படுகின்றன.
மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில், பாரம்பரிய நெல் விதைகளான துாயமல்லி, அறுபதாம் குருவை, மாப்பிள்ளை சம்பா, செங்கல்பட்டு சிறுமணி என, 4 வகையான நெல் விதைகள் வழங்கப்பட உள்ளது.ரூபாய் 25 மதிப்புள்ள ஒரு கிலோ நெல் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் 12.50 ரூபாய் வீதம், ஒரு விவசாயிக்கு 20 கிலோ மட்டும் வழங்கப்படுகிறது.
துாய மல்லி, அறுபதாம் குருவை, மாப்பிள்ளை சம்பா தலா 200 கிலோவும், செங்கல்பட்டு சிறுமணி நெல் ரகம் 320 கிலோவும், மதுராந்தகம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
தேவைப்படும் விவசாயிகள், ஆதார் அட்டை, நிலத்தின் பட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன், மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். முதலில் வருவோருக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாக, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!