Load Image
dinamalar telegram
Advertisement

பச்சைவாழியம்மன் கோவிலில் 12ம் தேதி தீமிதி திருவிழா



பாகூர்-கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவிலில் வரும் 12ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.புதுச்சேரி அடுத்த கன்னியக்கோவிலில், பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீமிதி திருவிழா கடந்த ௪ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனையொட்டி அன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றி, மகா தீபாராதனை நடைபெற்றது.விழாவில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உபய தாரர் முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலு குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முக்கிய விழாவான தீமிதி திருவிழா, வரும் 12ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடக்கிறது. அன்று மதியம் 12.00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், 13ம் தேதி தெப்பல் உற்சவம், 14ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement