Load Image
dinamalar telegram
Advertisement

யோகானந்தர் போதனை; தமிழில் வெளியீடு



புதுச்சேரி-புதுச்சேரி யோகதா சத்சங்க தியான மண்டலி சார்பில் பரமஹம்ச யோகானந்தரின் போதனைகள் தமிழில் வெளியீட்டு விழா நடந்தது.ரெட்டியார்பாளையம், ஜோதி நிலையத்தில் நடந்த விழாவிற்கு யோகதா சத்சங்க சொசைட்டியின் சுவாமி சுத்தானந்தா கிரி தலைமை தாங்கினார். ஒய்.எஸ்.எஸ் அமைப்பின் பிரம்மச்சாரி சுவாமி நிரஞ்சனானந்தா கலந்து கொண்டார்.இதில், மூத்த சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி பேசுகையில், இனிய வெற்றி கரமான வாழ்வு வாழ கிரியா யோகம் அவசியம் என்றார். மேலும், இந்திய மொழிகளில் முதலாவதாக தமிழ் மொழியில் பரமஹம்ச யோகானந்தரின் போதனைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ் மொழி பேசும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் என்றார்.யோகதா சத்சங்க சொசைட்டியின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளவும், வாழ்க்கையில் உங்களை மேம்படுத்திக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ysslessons.org என்ற இணையதளத்தை அணுகலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement