புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி திட்டம் துவக்க விழா
புதுச்சேரி-இந்தியா-சுவிட்சர்லாந்து இணைந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி திட்ட துவக்க விழா, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காணொலி காட்சி மூலம் நடந்தது.பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித்சிங், பதிவாளர் (பொறுப்பு) அமரேஷ் சமந்தராயா, இயக்குனர் (பொறுப்பு) தரணிக்கரசு, துறை முதன்மைத் தலைவர் சுப்ரமணியம் ராஜூ, திட்டத்தின் சுவிட்சர்லாந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம், வேர் பூஞ்சைகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது.இதற்கு சுவிட்சர்லாந்து தேசிய நிறுவனமும், இந்தியாவின் பையோ டெக்னாலஜி துறையும் சேர்ந்து நிதியுதவி அளிக்கிறது. இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆய்வாளர் மதிமாறன் நடராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!