செல்லிப்பட்டில் மேம்பாட்டு பணிஎம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
திருபுவனை-செல்லிப்பட்டில் ரூ. 32.84 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகளை அங்காளன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.திருபுவனை தொகுதி செல்லிப்பட்டு கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், கழிவு நீர் வாய்க்கால், சாலை, குடிநீர் குழாய்கள் பதித்தல் உட்பட மொத்தம் ரூ 32.84 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளது.இப்பணிகளை எம்.எல்.ஏ.,அங்காளன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!