Load Image
dinamalar telegram
Advertisement

இ - மெயிலை கைப்பற்றிய கணவர்; மனைவி புகார்

கோவை:தன்னுடைய இ-மெயில் கணக்கில் அத்துமீறி நுழைந்து, தனிப்பட்ட விவரங்களை எடுத்து விட்டதாக, கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார். கோவையை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கும், அமெரிக்காவில் வசிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியருக்கும், 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் தம்பதி அமெரிக்கா சென்றனர். அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.இந்நிலையில், தம்பதிக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இந்தியா வந்திருந்த நிலையில், மனைவியிடம் தெரிவிக்காமலேயே, கணவர் அமெரிக்கா சென்று விட்டார். இருவரும் சுமுகமாக பிரிந்து விட முடிவு செய்து, அமெரிக்க கோர்ட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். கோர்ட்டில் கணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்தார். தனது இ-மெயில் மற்றும் ஐ-கிளவுட் கணக்குகளை கைப்பற்றி, அதில் இருந்த தனிப்பட்ட விவரங்களை எடுத்துள்ளதாக எண்ணிய அவர், கோவை போலீசில் புகார் அளித்தார்.விசாரித்த கோவை சைபர் கிரைம் எஸ்.ஐ., முத்து, புகாருக்கு ஆளான கணவர் மீது வழக்கு பதிந்துள்ளார். இன்ஸ்பெக்டர் தண்டபாணி விசாரிக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement