Load Image
dinamalar telegram
Advertisement

பிளாஸ்டிக் பயன்படுத்த கடற்கரையில் தடை

சென்னை, :சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு:ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட 28 வகை பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளுக்கு வருவோர் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தி, அங்கேயே வீசி விட்டுச் செல்வதால், அது கடலில் கலந்து, கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கிறது.இதனால், கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சி சார்பில், நேற்று முதல் காலை, மாலை வேளைகளில் 'ரெய்டு' நடத்தப்படுகிறது.சென்னை முழுதும், ஜூலை 27ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை, 6,478 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஆய்வு செய்து, 1,861 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, 9.17 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement