Load Image
dinamalar telegram
Advertisement

கர்நாடகாவின் மாற்றத்திற்கான நிறுவனம்: புதிய திட்டங்கள் தயாரிக்கும் அமைப்பு

பெங்களூரு-புதிய இந்தியாவுக்காக, புதிய கர்நாடகாவை உருவாக்கும் நோக்கில், புதிய திட்டங்கள் தயாரிப்பதற்காக, கர்நாடகாவின் மாற்றத்திற்கான நிறுவனம் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக நிடி ஆயோக் மற்றும் திட்ட ஆணையத்தை, மத்திய நிடி ஆயோக் போன்று, ஒன்றாக இணைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக முதல்வர் தலைமையில் 'கர்நாடகாவின் மாற்றத்திற்கான நிறுவனம்' என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கும்படி மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.புதிய இந்தியாவுக்காக, புதிய கர்நாடகாவை உருவாக்கும் நோக்கில், புதிய திட்டங்கள் தயாரிப்பதற்காக பல்வேறு துறை நிபுணர்களை துணை தலைவராக அரசு நியமிக்கும்.இது தொடர்பாக திட்டம் மற்றும் புள்ளியியல் துறை துணை செயலர் மாலதி நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுவதற்கு, மாநில அரசு ஆண்டுதோறும் 150 கோடி ரூபாய் வழங்க உள்ளது.திட்டம், பொருளாதாரம், சமூக நலன், கல்வி, சுகாதாரம், விவசாயம், கிராமிய மேம்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு, புதுப்பிக்க கூடிய எரிவாயு, நிதி ஆகியவரை சேர்த்து எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர். அத்துறைகளின் அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பர்.திட்டம், புள்ளியியல் துறை கூடுதல் தலைமை செயலர்கள், தலைமை செயல் அதிகாரிகள் ஆலோசகர்களாக இருப்பர். ஏழ்மை ஒழிப்பு, வருவாய் பெருக்குதல், சத்தான உணவு பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இந்திய அறிவியல் கழகம், இந்திய நிர்வாக மேலாண்மை நிறுவனம் உட்பட அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் புதிய அமைப்பில் இடம் பெறுவர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement