Load Image
dinamalar telegram
Advertisement

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகருக்கு கத்தி குத்துகொலை செய்ய முயற்சித்ததாக புகார்



கோலார்-ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ஒருவரின் முகத்தில், கத்தியால் குத்திய சம்பவம், மாலுாரின் மாரிகாம்பா சாலையில் நடந்துள்ளது.கோலார் மாலுாரின் மாரிகாம்பா சாலையில், நேற்று மதியம் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ரவி, ஸ்டீல் கடை முன்பாக நின்றிருந்தார். அப்போது பைக் உராய்ந்ததில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதை விலக்கி விட சென்ற ரவியை, இரண்டு நபர்கள் கத்தியால் குத்தியதில், முகத்தில் காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்.மாலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.ரவி கூறியதாவது:என்னை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், வேறு சமுதாயத்தை சேர்ந்த நபர்கள் வந்திருந்தனர். ஸ்டீல் கடை முன் சண்டை போட்டனர். நான் மனிதநேய அடிப்படையில், சண்டையை விலக்கி விட முற்பட்டேன்.அப்போது ஒருவர், பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து, என்னை கொலை செய்ய முயற்சித்து குத்தினார். இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement