Load Image
dinamalar telegram
Advertisement

முன்கூட்டியே வாருங்கள்; விமான நிலையம் அழைப்பு



பெங்களூரு-சுதந்திர தினத்தை ஒட்டி, நெரிசல், தாமதத்தை தவிர்க்க, விரைந்து வருமாறு பயணியருக்கு, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.வரும் 12ம் தேதி ரக் ஷா பந்தன், அதை தொடர்ந்து சனி, ஞாயிறு, ஆக., 15ம் தேதி சுதந்திர தின விழா என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது.இந்நாளில் பலரும் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. அப்போது விமான நிலையம், ரயில் நிலையங்களில் பயணியர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.இது குறித்து பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:அடுத்த வார இறுதியில் பயணியரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, பெங்களூரு விமான நிலையத்தில் பயணியரை பரிசோதிப்பதில் தாமதம் ஏற்படலாம்.பாதுகாப்பு சோதனைக்கு போதுமான நேரத்தை வழங்கவே பயணியர், முன் கூட்டியே விமான நிலையத்திற்கு வருமாறு தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement