Load Image
dinamalar telegram
Advertisement

டி - 20 கிரிக்கெட்: தமிழகம் சாம்பியன் : 9 விக்கெட் வித்தியாசத்தில் பீஹாரை வீழ்த்தியது

Tamil News
ADVERTISEMENT

சென்னை, :அகில இந்திய கிரிக்கெட் போட்டியில், பீஹார் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.தமிழ்நாடு கிரிக்கெட் பெடரேஷன் சார்பில், 39வது அகில இந்திய அளவில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, மெரினா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.இதில், தமிழகம் தெலுங்கானா, பீஹார், புதுச்சேரி உள்ளிட்ட ஏராளமான அணிகள் பங்கேற்றன.இதில், தமிழகம் மற்றும் பீஹார் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. மெரினா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த பீஹார் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய தமிழக அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, 12.4 ஓவர்களில் 136 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.இதனால், 9 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement