Load Image
dinamalar telegram
Advertisement

சின்ன சின்னதாய்




ஊழல்கள் பெருக்கம்


''லோக் ஆயுக்தா அதிகாரத்தை ஆட்சியாளர்கள் குறைந்ததால் ஊழல் ஒழிக்க சாத்தியமில்லை,'' என லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறினார்.கோலாரில் நேற்று அவர் கூறுகையில், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் உள்ளவர்களால், ஊழலை ஒழிக்க முடியவில்லை. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா செயல்பட்டது. அதன் அதிகாரத்தை குறைத்து ஏ.சி.பி., என்ற ஊழல் தடுப்பு படையை ஏற்படுத்தினர். 24 மணி நேரத்தில் ஊழலை ஒழிக்க முடியும் என்றனர். ஆனால் ஆண்டுகள் பல ஆனாலும் ஊழலை ஒழிக்க சாத்தியமில்லை.இதனால் நிர்வாகம் சீர்பட வாய்ப்பு இல்லை,'' என்றார்.

கருடா கோவில் ஆண்டு விழா
முல்பாகல் துங்கசந்திராவில் பிரசித்தி பெற்ற வைணவ கோவிலான 'கருடா கோவில்' ஆண்டு விழா நேற்று நடந்தது. விசேஷ பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மின்னொளி அலங்காரம் செய்திருந்தனர்.

இடுகாட்டுக்கு இடம்
மாலுார் மாஸ்தி பகுதியில் இடுகாட்டில் இடம் வசதி இல்லை. எனவே, மேலும் 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு குருபர் சங்கத்தலைவர் ரவீந்திரா தலைமையில் ஒரு குழுவினர், கோலார் மாவட்ட கலெக்டர் வெங்கட் ராஜுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். தாசில்தாருடன் பேசி ஆவண செய்யப்படும் என கலெக்டர் பதிலளித்தார்.

கஞ்சா பறிமுதல்
சீனிவாசப்பூரில் ஸ்கூட்டர் ஒன்றில் போலீசார் சோதனையிட்டனர். இதில் 23 கிலோ கஞ்சா இருந்தது. விசாரித்ததில், கோலாரை சேர்ந்தஅமீர் பாஷா 30, என்பதும், ௧0 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நிரம்பி வழியும் ஏரிகள்
கோலாரின் கோலாரம்மா ஏரி, சோமாபூதி ஏரி; பங்கார்பேட்டையின் தேஷிஹள்ளி ஏரி, தொட்டகரே ஏரி, பேத்தமங்களா ஏரி உட்பட பல்வேறு ஏரிகள் நிரம்பி உள்ளது. கிராம மக்கள் அர்ப்பணிப்பு பூஜை நடத்தி வருகின்றனர். ஏரிகள் எல்லாம் சுற்றுலா மையமாக மாறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement