Load Image
dinamalar telegram
Advertisement

சித்து பிறந்த நாள்; காங்கிரசுக்கு சக்தி



பெலகாவி-''சித்தராமையாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தால், தீபாவளி பரிசு போன்று, கட்சிக்கு புதிய சக்தி வந்துள்ளது. கர்நாடக காங்கிரசின், அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம்,'' என மாநில காங்., செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:சித்தராமையாவை, தழுவிக்கொள்ளும்படி சிவகுமாருக்கு கூறியதில் தவறேதும் இல்லை. சிவகுமார் மறந்திருக்கலாம். எனவே ராகுல் அறிவுறுத்தியதில் தவறேதும் இல்லை. சிவகுமார்,- சித்தராமையா மனமார, தழுவிக்கொண்டு கைகோர்த்தனர்.கட்சியை பலப்படுத்துவது பற்றி, ராகுலுடன் விவாதித்தோம். சித்தராமோற்சவத்துக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் செல்ல, பா.ஜ., தலைவர்களே வாகன வசதி செய்தனர்.சித்தராமையாவின், பிறந்த நாள் கொண்டாட்டத்தால், தீபாவளி பரிசு போன்று, கட்சிக்கு புதிய சக்தி வந்துள்ளது. கர்நாடக காங்கிரசின், அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement